ஐ.நா பாதுகாப்பு துறைத் தலைமைப் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) ஏற்கவுள்ளது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையொன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.
இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படவுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஐ.நா. செல்லவுள்ளார். இதன்போது ஒரு அங்கமாகஇந்த சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு துறையின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசத்தந்தை மகாத்மாவின் இந்த சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார்.
இதன் மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது.
முன்னதாக கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐ.நா.வுக்கு பரிசளித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.