ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
தலைமைப்பதவி மாற்றம் தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், எதிரணியை சீர்குலைக்கும் வகையில் இந்த தகவல் பரப்பட்டுவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் இருந்து சஜித் பிரேமதாசவை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles