ஐசிசி தடை – ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும் , கிரிக்கெட் தொடர்பில் நியமிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவுக்கு அதிகாரம்
வழங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்தார்.

மேலும், இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிப்பதாயின், அதற்கு அமைச்சரவையின் அனுமதி அவசியமாகும்.

Related Articles

Latest Articles