ஐஸ் போதைப்பொருளுடன் 6 இளைஞர்கள் கைது

உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (27) மாலை இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் சார்ஜன் குணவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், 17,000 ரூபா பணம் என்பவற்றுடன் 7 சிறு சிறு பொதிகளில் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் உடையார்கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த நால்வர், புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இருவர் என 17,18,18,21,23,24 வயதுடைய இளைஞர்கள் 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles