ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் இன்று சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும் 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன

Related Articles

Latest Articles