ஒஸ்போன் தோட்டத்தில் காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 73 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான பொன்னுசாமி மகாலிங்கம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த பத்து நாட்களுக்கு முன்பதாக காலை 7.30 மணியளவில் காணாமல் போனதையடுத்து நோட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபரை தொடர்ச்சியாக தேடும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்நிலையில் நேற்று காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கும் நோட்டன் பகுதிக்கும் இடையில் உள்ள காசல்ரீ ஓயாவில் சடலமொன்று மிதப்பதைக் குறித்த அப்பகுதிக்கு வந்த தோட்ட மக்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில, ஹற்றன் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டப் பின்னர பிரதே பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்த நோர்ட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles