இவ்வாண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மாதம் 25ம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் கடந்த மே மாதம் சாதாரண தர பரீட்சைகள் 3,844 மத்திய நிலையங்களில் நடைபெற்றன. இந்த பரீட்சைகளுக்காக 517,486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










