கணபதி கனகராஜுக்கும், மதிக்கும் ஜனாதிபதி செயலகத்தில் பதவிகள்..

ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவின்  மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ்   கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக  பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும்  ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காகவும், தொழிற்சங்க ரீதியாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles