பாதாள குழு உறுப்பினரான “கணேமுல்ல சஞ்சீவ” வின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே விசேட அதிரடிப்படையினரால் 33 வயதான குறித்த நபர், ராகம, கல்வலவத்த பிரதேசத்தில் வைத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 526 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ வின் உதவியாளர் என்பதுடன் வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும், திக்பிடிகொட லஹிரு வின் போதைப்பொருட்களை இலங்கையில் விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.