கண்டி நகரில் முறிந்து விழுந்தது இராட்சத மரம் – 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்!

கண்டி நகரில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீதியில் இரு புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கடும் மழை பெய்துவரும் நிலையிலேயே மரம் இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

கண்டி தீயணைப்பு பிரிவினர், பொலிஸ் மற்றும் பொது மக்கள் இணைந்து மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

Related Articles

Latest Articles