‘கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறியாதே’ – பொன்சேகாவுக்கு பதிலடி கொடுத்த வீரசேகர!

” கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய முற்பட வேண்டாம்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொன்சேகா எம்.பி. தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.

” பொன்சேகாவின் குணம் பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நல்லாட்சியின்போது அவருக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுபதவிகூட வழங்கப்படவில்லை. ஆனால் இன்று பாதுகாப்பு அமைச்சு பதவி பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறார்.

யுத்தம் முடிவடைந்த பிறகு தேவையற்ற விதத்தில் ஆயுத கப்பலொன்றை கொண்டுவந்தார். அதனை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் திருப்பி அனுப்பியதாலேயே அவருடன் பொன்சேகா முரண்பட்டார். எனவே, கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles