கந்தபளை, கோர்ட்லோஜ் கோவிலில் இருந்த மின்குமிழ்கள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கந்தப்பளை , கோர்ட்லோஜ் மலை உச்சியிலுள்ள பழமையான இந்து கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது.
இக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் ஐம்பது ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க மின்குமிழ்களே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொது மக்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டி.சந்ரு செ.திவாகரன்










