கமல்ஹாசனின் 237 ஆவது படம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு……

நடிகர் கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதர்கள் இயக்குகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்திற்கு பிறகு இவரின் 234-வது படமான தக் லைஃப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு தொடர்பான வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து கமலின் 235-வது படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குநர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளிவரைவில்லை. பா.ரஞ்சித் தற்போது ‘தங்கலான்’ உருவாக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். நெல்சன் ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கதைக்கான எழுத்துப்பணியில் ஈடுபட்டுள்ளதாக சில தினங்கள் முன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதர்கள் இயக்குகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் மெட்ராஸ், கேஜிஎஃப், கைதி, விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

2022 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் அன்பறிவ் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles