கம்பளை – தெல்பிட்டிய பகுதியில் விபத்து: 10 பேர் காயம்!

பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் வாகனமொன்று கம்பளை, தெல்பிட்டிய பகுதியில் வைத்து 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஜீப் வாகனத்தில் 15 பேர் பயணித்துள்ளனர்.
மரண வீடொன்றுக்கு திரும்பிய குழுவினரின் பயணித்த ஜீப் வண்டியே இன்று அதிகாலை 4 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரியவருகின்றது.

 

Related Articles

Latest Articles