காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி

கெக்கிராவ-ஹொரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

57 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது மகனின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த காட்டுயானைகள் கலாவெவ தேசிய பூங்காவில் இருந்து கிராமத்திற்கு வந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles