காணாமல்போன குடும்பஸ்தர் நானுஓயாவில் சடலமாக மீட்பு!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு முதல் காணாமல்போயிருந்த நபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.நானுஓயா , கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே (49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நானுஓயா , கிரிமிட்டி நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று இரவு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அவர் திருப்பி வராததால் குடும்பத்தாம், பொது மக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர். இதன்போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Latest Articles