மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மாலை ஆணொருவரின் சடலம், கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ பகுதியை சேர்ந்த வேலு மருதமுத்து (55) நேற்று முன்தினம் காலை முதல் காணாமல்போயிருந்தார்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், தேடுதல் வேட்டை ஆரம்பமானது.
இந்நிலையிலேயே இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.