தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,
நீண்ட காலம் வெளிநாட்டில் வாழ்கிறீர்கள். அதற்கான காரணமும் சொல்கிறீர்கள். வாழ்ந்து விட்டு போங்கள்..! சொல்லி விட்டு போங்கள்..!
ஆனால் இன்று, மலையக பரப்பில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன என்பதையும், மலையக அரசியல் பிரதிநிதிகள் தத்தம்பங்களிப்புகளை வழங்க, நாம் ஒரு இலக்கை நோக்கி நிதானமாக முற்போக்காக நடை பயணம் போகிறோம் என்பதையும் தேடியறியுங்கள்.
காணி உரிமை என்பது கடையில் வாங்கும் சரக்கல்ல..! இந்த இனவாத சூழலில் ஆயுதம் தூக்கி பெறுவதுமல்ல..!
கவனமாக காய் நகர்த்தி, எமது தரப்பு நியாயத்தை உரக்க கூறி, அவர்களையும் ஏற்கச்செய்து, ஒருகணம் சத்தமிட்டு, அடுத்த கணம் சிரித்து பேசி, நாம் முற்போக்கு சாலையில் படிப்படியாக பயணிக்கிறோம் என்பதை என்னை பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்.
ஒப்பாரி வையுங்கள். குறை கூறுங்கள்.
ஆனால் அதையே முழுநேர தொழிலாக செய்யாதீர்கள். இடையில் நான்கு நல்ல ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.
