பதுளை, ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
பதுளை, வேவெல்ஹின்ன – ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் குறித்த சிறுமி கடந்த 03 ஆம் திகதி தனது காதலனுடன் ஆட்டோவில், ரிதிபான பகுதியில் உள்ள மலையை பார்க்கச் சென்றுள்ளார்.
இதன்போதே காதலனால் அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கதியை எண்ணி விரக்தியால், வீட்டில் இருந்த மருந்து வகைகளை உட்கொண்டுள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் டிசம்பர் 04 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் 05 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான காதலன் நேற்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ரத்நாயக்க ஆகியோரின் பணிப்புரைக்கமைய சிறுவர் மற்றும் மகளிர் விசாரணை பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ராமு தனராஜ்