பிபிலை, மெதகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதகம பொலிஸ் நிலைய போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் 240 மில்லிகிராம் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் காத்தான்குடி பகுதியிலிருந்து மெதகம பகுதிக்கு வருகைதந்தவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது.
நடராஜா மலர்வேந்தன்










