ஹம்பாந்தோட்டை-வெல்லவாய வீதியின் பன்னகமுவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து வெல்லவாய நோக்கி சென்ற கார், எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 67 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக காரின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
