மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு நாளை (30) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நிகழ்வு ஏற்பாட்டு
குழுவினரின் சார்பில் பரமநாதன் குமாரசிங்கம்,சுப்பிரமணியம் மோகனராசா ஆகியோர் தெரிவிக்கையில்,
” மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மலையகம் 200 நிகழ்வை சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாளைய (30) நிகழ்வில், இந்திய தமிழ்த் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கில்மிஷா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.” – என்றார்.










