முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இன்று காலை அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் செல்லும் கோட்டா குடும்பத்தார், அங்கிருந்து அமெரிக்கா செல்வார்கள் என தெரியவருகின்றது.
கோட்டாவின் மனைவி அயோமா ராஜபக்ச, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ச , மருமகள் எஸ்.டி.ராஜபக்ச மற்றும் பேத்தி ஆகியோரே இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
