குட்டி தேர்தலில் மாத்தளையில் களமிறங்கும் ஜேர்மன் பெண்!

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் களமிறங்குகிறார்.

இந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஜேர்மனிய பெண் இன்று புதன்கிழமை (18) செலுத்தியுள்ளார்.

தனது அரசியல் ஈடுபாட்டின் மூலம் இலங்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles