பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்கள் இருவருக்கும், பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
ஆண்கள் இருவரில் 20 வயதுடைய இளைஞன் போவத்தலாவ மரக்கறி பண்ணையில் தொழில் புரிபவர் எனவும், 50 வயதுடையவர் தோட்டத் தொழிலாளி எனவும் தெரியவருகின்றது.
குயினா தோட்டத்தில் 150 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன.
பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 31 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










