குரோத அரசியலுக்கு நீடித்த ஆயுள் கிட்டாது!

குரோத அரசியலே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குரோத அரசியலின் பயணத்துக்கு நீடித்த ஆயுள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ உண்மை நிச்சயம் வெல்லும். நீதிமன்றம் ஊடாக அது நடக்கும் என நம்புகின்றேன். நான் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். பின்வாங்கவில்லை. மாற்றத்துக்காகவே மக்கள் வாக்களித்தனர். அந்த மாற்றத்தை அவர்கள் (தேசிய மக்கள் சக்தி) செய்ய வேண்டும்.

நடைமுறை சாத்தியமான விடயங்களையே செய்வதற்கு முற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் உறுதிமொழிகளை வழங்கினால் மாட்டிக்கொள்ள நேரிடும். அதற்கான நாள் தொலைவில் இல்லை.
2015 இலும் குரோத அரசியல் முன்னெடுக்கப்பட்டது. தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles