குறுக்கே பாய்ந்தது நாய்: கொட்டகலையில் விபத்துக்குள்ளானது கார்!

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்று, வீதியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொட்டகலை, ஸ்டோனிகிளிப் பகுதியிலேயே இன்று முற்பகல் 9 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரில் நால்வர் பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார், வீதியில் இருந்து தேயிலை மலைக்குள் சென்றதால் காருக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

ஆ.ரமேஷ், செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles