வவுனியா – மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி வீழ்ந்த இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
மேற்படி இளைஞர் தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்றபோது கால் தவறி குளத்துக்குள் வீழ்ந்தார்.
இதனையடுத்து ஊர் மக்கள் மேற்படி இளைஞரைத் தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். எனினும், கடந்த இரண்டு நாட்களாக இளைஞர் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் மேற்படி இளைஞரின் சடலம் அந்தக் குளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.
வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
இது தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.