குளவிக்கொட்டு – 10 மாணவர்கள் பாதிப்பு!

ஹல்தமுல்ல பிரதேசத்தில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் இன்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம் 10,11,12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் 8 மாணவிகளும் 2 மாணவர்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி ஹல்தமுல்ல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் மேலதிக வகுப்புகளில் கல்வி பயின்று விட்டு வீடு திரும்பிய சந்தர்பத்திலேயே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புதளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles