கூரைவழியாக வீடு புகுந்து உறக்கத்தில் இருந்த பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளை – கம்பளையில் பயங்கரம்

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு கொள்ளையர் தப்பியோடிய சம்பவமொன்று கம்பளை, கம்பளை, போவெல – பின்தாளிய பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கூரைவழியாகவே கொள்ளைக்காரன், வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெறுகின்றன.

போவெல பகுதியில் இதற்கு முன்னரும் நித்திரையிலிருந்த பெண்ணொருவரின் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பதிவானது.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles