ஜுலை ஒன்று முதல் ஆட்டத்தை பாருங்கள் என கொக்கரித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்னமும் குறட்டை விட்டு தூங்குகின்றது – என்று விளாசித் தள்ளியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” ஜூலை 01 முதல் ஆட்டத்தை பாருங்கள் என்று சொன்ன இ.தொ.கா,
இன்னும் கொறட்டை விட்டு தூங்குவதால்
வாக்களித்த மக்களுக்கு நடு ரோட்டில் திண்டாட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தோட்ட கம்பனி காரர்களின் கெடு பிடியால் மக்கள் இன்று நடு ரோட்டில் போராடி கொண்டிருக்கின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
பொகவந்தலாவ கொட்டியாகலையில் போராட்டம் செய்த மக்களிடம் ராஜாங்க அமைச்சர், 13 கிலோ கொழுந்து எடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். இப்போ எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை.
அதே போல் கொட்டகலையில் போராட்டம் செய்த மக்களிடம் 10கிலோ எடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்ன அந்த இராஜாங்கம் தலைமறைவு ஆகிவிட்டாரா?
மக்கள் தமது கஷ்ட்டத்திற்கும் வேதனைக்கும் போராட்டம் செய்யும் போது பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான வார்த்தைகளை மக்களிடம் சொல்லிவிட்டு ஓடி ஒளிந்து கொள்கின்றார் ராஜாங்க அமைச்சர் .
இவரை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.
பதுளையில் போராட்டத்தில் ஈடு பட்ட தொழிலாளர்களை கம்பெனி காரர்கள் வேலையை விட்டே தூக்கிவிட்டனர்.
இவ்வாறு கம்பெனி காரர்களின் அட்ட காசம் தொடரும்வேளையில்
பாரத் அருள்சாமி, ஜுலை 01ம் திகதி தூக்கத்தில் இருந்து எழும்புவோம், கம்பெனியை ஒரு கை பார்ப்போம் என்று சொன்னார். ஆனால் இ.தொ.கா. இன்னும் தூங்குகின்றது. ” என்றார்.










