கைதியை பிடிக்க ஆற்றுக்குள் பாய்ந்து மாயமான பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!

சந்தேக நபரை பிடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கி காணாமல்போய் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 30 மணிநேர தேடுதலின் பின்னர் நீர்க்கொழும்பு களப்பு பகுதியில் இருந்து அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் ஜா – எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச்செல்ல முற்படுகையில், பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் நேற்று முன்தினம் பாய்ந்துள்ளார்.

அவரை பிடிப்பதற்கு பொலிஸாரும் ஆற்றில் இறங்கியுள்ளனர். இதன்போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீடில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். நேற்று முதல் தேடுதல் பணி இடம்பெற்றது. கடற்படையின் சுழியோடிகள் களமிறக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜா – எல ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல்போன இடத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் உள்ள நீர்க்கொழும்பு களப்பில் இருந்து சடலம் நேற்று மாலை 4 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.

ஜா – எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிரகாசன் (வயது – 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles