கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத் தொடு வாய் மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகு திகள் மீட்கப்பட்டுள்ளன என்று முல் லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி க.வசுதேவா
தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“துப்பாக்கிச் சிதறல்கள் மற்றும் சன்னங்களும் இதன்போது மீட்கப் பட்டுள்ளன. அத்துடன் கையில் அணியப்படும் இலக்கத் தகடு ஒன்றும், மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணி இன்று ஞாயிற் றுக்கிழமை இடம்பெறாது. நாளை திங்கட்கிழமை அகழ்வுப் பணி நடை பெறும்.” – என்றார்.

Related Articles

Latest Articles