கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இருந்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி, கௌரவிக்கும்
நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் இரா.சிவலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா கல்வி வலய கோட்டம் 2 இன் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜெகதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.ஆரம்ப பிரிவு ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 170 மாணவர்களும் பாராட்டப்பட்டதோடு கற்பித்த ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
நிருபர் – கௌசல்யா