கொத்மலை, உடபளாத்த பிரதேச சபைகளுக்குரிய இதொகாவின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

‘மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கமைய கொத்மலை, பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஹெட்ட ஆகிய பிரதேச சபைகளுக்குரிய இதொகாவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கான இதொகாவின் வேட்பு மனு தொடர்பான தீர்மானம் இதுவரையில் எட்டப்படாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்பிற்கு அமைய இது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 20 ஆம் இடம்பெற்றிருந்தது.

இதில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள மாவட்ட செயலகத்தில், நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாச்சி அதிகாரியிடம் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், கண்டி மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான முகவர்களினாலும் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இதில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை மற்றும் மஸ்கெலியா ஆகிய சபைகளுக்குரிய வேட்பு மனுக்களும், கண்டி மாவட்டத்தில் பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஹெட்ட ஆகிய சபைகளுக்குரிய வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பில் இ.தொ.கா வினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார்.

Related Articles

Latest Articles