கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை மறுதினம் (19) ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே கொட்டகலை நகர வர்த்தக சங்கத்தால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி சங்கத்தின் விசேட கூட்டம் சங்கத் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
