கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன ஒன்றியம் ’ அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.










