கொழும்பின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம், பேரணிகளை நடத்த தடையுத்தரவு

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மருதானை பொலிஸாரால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) காலை 10.30 முதல் நாளை (29) முற்பகல் 10 மணி வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கவுள்ளது.

தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடம், அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்து பிரிவு, கண் வைத்தியசாலை, சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள நடைபாதைகளை பயன்படுத்த முடியாதென அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles