கொவிட் தொற்று கர்ப்பிணிகளுக்கு தனி பிரசவ அறை

கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக பல வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின்பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் அநாவசியமாக அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 3,800 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதுடன், அவர்களில் 850 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Latest Articles