கோப் குழுவில் இருந்து தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா!

கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு மொட்டு கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் பதவி விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles