ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவே பொருத்தமானவர் – என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்களா, பொன்சேகாவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், அடுத்த தேர்தலில் தான் போட்டியிட எதிர்பார்க்கவில்லை எனவும், தேசிய பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை தேர்தல் ஒத்திவைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டால் இந்நாட்டில் மீண்டும் அராஜக நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.










