“ மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்த அனைவரும் எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் முன் பொறுப்புகூறவேண்டிவரும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்து மக்களின் அடிப்படை உரிமையை ஜனாதிபதி மீறியுள்ளார் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர். மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி தயாராகவே உள்ளது.
மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த அனைவரும் எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் முன் பொறுப்புகூறவேண்டிவரும்.” – என்றார்.










