சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முற்பட்ட நிலையில் அந்த நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 41 இலங்கையர்கள் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த விசேட விமானத்தில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்பு மற்றும் மாரவில பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
