சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணகல பகுதியில் அனுமதி பத்திரமின்றி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19, 26 வயதுடைய இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவர் மீதும் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles