முன்னதாக எதிர்வுகூறப்பட்டதை போலவே தற்போது, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.
நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதுவரை 50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை 60- 70 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் திறனை நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்காலிகமாக இழந்ததையடுத்து, உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான விலையை நிர்ணயித்துள்ளனர்.










