ஜே.வி.பி. தேசியப்பட்டியல் வேட்பாளர் இப்ராஹிமை சனல் – 4 ஊடகம் மறந்தது ஏன்? மொட்டு கட்சி கேள்வி

” சனல் – 4 வீடியோ போன்ற சூழ்ச்சிகள்மூலம் ராஜபக்சக்களினதோ அல்லது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினதோ அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. தேர்தலொன்று நடக்கட்டும், மக்கள் யார் பக்கம் என்பதை காண்பிப்போம்.”

இவ்வாறு சூளுரைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெற வைக்கவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டதாம் எனக் கூறப்படுகின்றது. 2019 இல்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நாம் அமோக வெற்றியை பதிவுசெய்துவிட்டோம்.

உள்ளாட்சி தேர்தலை முடிந்தகையோடு மொட்டு கட்சி அல்ல, நாட்டு மக்கள்தான் கோட்டாபய ராஜபக்சவை கோரினர். இதுதான் உண்மை.

அதேவேளை, சனல் – 4 திரைப்படம் இப்ராஹிம் என்பவரை ஏன் மறந்தது? இப்ராஹிம் என்பவர் ஜே.வி.பியின் தேசிய பட்டியல் வேட்பாளராக இருந்தார். அவரின் இரு மகன்மார் தற்கொலை குண்டுதாரிகள். இந்த விடயம் ஏன் மறக்கப்பட்டது? இப்படியான நகர்வுகள்மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles