சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என தெரியவருகின்றது.
” சபாநாயகருர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால்தான் நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணை முடிவுக்கு செல்வோம். இது பற்றி இறுதி முடிவு இல்லை. ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம்.” – எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
அதேவேளை, தனது கல்வி தகைமை பற்றி சபாநாயகர் விரைவில் தெளிவுபடுத்துவார் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
