அரசுக்கு சார்பாக செயற்படும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வாக்கெடுப்பின்போது எதிரணியின் கோரிக்கையை ஏற்காது, சபாநாயகர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டார் எனவும், இரவு 9.30 மணிக்கு நடத்த வேண்டிய விவாதத்தை 7.30 இற்கு நடத்தினார் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.