சமையல் எரிவாயு விலை இம்மாதம் அதிகரிக்கப்படமாட்டாது என தெரியவருகின்றது.
சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல் அதிகரிக்கப்பட முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால், விலை அதிகரிப்பு இடம்பெறாது என தெரியவருகின்றது.
இது தொடர்பில் லிற்றோ நிறுவனம் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.