இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள இரா. சம்பந்தனின் வதிவிடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அத்துடன், கட்சிக்குள் ஐக்கியம் அவசியம் என்பதையும் சம்பந்தன், புதிய தலைவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் இரா. சம்பந்தன் பல வருடங்கள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










